வேத மந்திரங்களுடன் பாரம்பரிய முறைப்படி.. - வாரணாசியில் தவளைகளுக்கு டும்.. டும்..

x

வட இந்தியா முழுவதும் கடந்த மாதம் முதலில் அனலாய் தகிக்கும் வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், வெப்பத்தை தணித்து, மழை பெறுவதற்காக உத்தர பிரதேசம், வாரணாசி மாவட்டம், பஹாரியா பகுதியில் உள்ள ஸ்ரீ நகர் காலனி சேர்ந்த மக்கள் தவளைக்கு திருமணம்

செய்து வைத்தனர். ஆண் தவளை மற்றும் பெண் தவளைகளுக்கு பாரம்பரிய முறைப்படி அவர்கள் திருமணம் செய்து வைத்தனர். தவளைகள் பாரம்பரிய பட்டு வஸ்திரத்தால் போர்த்தப்பட்டு இருக்க, வேத விற்பன்னர் மந்திரம் ஓத, பொதுமக்களின் ஆன்மீக பாடல்களுடன் திருமணம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்