வரதராஜ பெருமாள் தீர்த்தவாரி உற்சவம்காணக்குவிந்த பக்தர்கள்
உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோயிலில் கோடை காலத்தை குறிக்கும் வகையில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வசந்த உற்சவத்தின் 7ஆம் நாளான இன்று வசந்த மண்டபத்தில் இருந்து வரதராஜப் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்ததார். அதனை தொடர்ந்து கோயிலுக்கு திரும்பிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்ப்ட்டு கோவில் பட்டாச்சாரியார்கள், வேதங்கள் ஒலிக்க திருக்குளத்தில் மூழ்கி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story