பரியேறும் பெருமாள் பட பாணியில் குடோனில் அடைத்து இளைஞருக்கு நேர்ந்த உச்சகட்ட பயங்கரம்
வாணியம்பாடி அருகே 17 வயது சிறுமியிடம் பேசியதாக கூறி, மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமியிடம், மாற்று சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை என்ற இளைஞர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் தந்தை சக்திவேல், தாய்மாமன் விஜயகுமார் ஆகியோர் அண்ணாமலையை குடோனில் அடைத்து வைத்து, இரும்புக் கம்பி மற்றும் காலணியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சக்திவேல், விஜயகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், இளைஞர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story