தன் கணவனையே திருமணமாகாத பெண்களுக்கு கணவனாக்கி மெகா மோசடி... பலிகடா ஆன அப்பாவி இளம் பெண்கள்

x

வாணியம்பாடி அருகே, ஏராளமான பெண்களின் பெயரில் 40 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி பெண் ஒருவர் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதயேந்திரம் பகுதியை சேர்ந்த மார்த்தா என்ற பெண், அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் ஆவணங்களை வாங்கி, நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. திருமணமாகாத பெண்களுக்கு, தன்னுடைய கணவருடன் திருமணம் ஆனதாகவும், வயதான பெண்களுக்கு வயதை குறைத்தும் ஆவணங்களை தயாரித்து கடன் வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர். 40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு மார்த்தா தலைமறைவானதால், கடனை வசூலிக்க வருபவர்கள் தொந்தரவு செய்வதாக கண்ணீர் வடிக்கும் பாதிக்கப்பட்ட பெண்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்