தண்ணீர் தொட்டியில் மிதந்த உடல்.. அதிர்ந்த மக்கள்

x

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள முகமது அஸ்லம் என்பவருக்கு சொந்தமான, தனியார் தோல் தொழிற்சாலை முன்பு, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டுள்ளது. அந்த தொட்டியில் ஒரு சடலம் மிதிப்பதாக, அவ்வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு, தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீசார் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வாணியம்பாடி அடுத்த உதயந்திரம் பகுதியை சேர்ந்த 50 வயதான வினோத்குமார் என்பதும், அவர், வேறு ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இவர் கடந்த 31ஆம் தேதி மாலை நேரத்தில் தண்ணீர் தொட்டி மீது அமர்த்த கொண்டிருந்த போது, தவறி விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, தொழிலாளியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி,சடலத்தை எடுக்க விடாமல், தொழிற்சாலை முன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்