மண்ணில் புதைந்த சிவன் கோயில்...திசை அறிகுறி காட்டிய சர்வே மேப்..சந்திரனை பிடிக்கும் பாம்பு..

x

வந்தவாசி அருகே மண்ணால் மூடப்பட்டு இருந்த பாழடைந்த சிவன் கோயிலை பொதுமக்கள் சீரமைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தில் உள்ளே ஏரிக்கரையில், ஆளவாய் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில் மண்ணால் மூடப்பட்டு இருந்தது. கோயில் மேல்பகுதி முழுவதும் மண்ணால் மூடப்பட்டு கோபுரம் சேதமடைந்திருந்தது.கோயிலின் முன் பக்கம் இருந்த சிறிய வாசல் வழியாக உள்ளே சென்று பொதுமக்கள் பூஜை செய்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்கள் ஒன்றிணைந்து, பொக்லைன் மூலம், மண்ணை அகற்றி கோயிலை சீரமைத்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் என கூறப்படும் நிலையில், தமிழக அரசு இந்த கோயிலை ஆய்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்து புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோயிலின் உள்பிரகாரத்தில், பாம்பு சந்திரனை பிடிக்க முயல்வது போன்று அடையாளக் குறிகளை செதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்