வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜ பெருமாள் - கோவிந்தா கோஷத்துடன் தரிசித்த பக்தர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் வரதராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து வைகை ஆற்றில் எழுந்தருளினார். வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு இந்த வைபவம் நடைபெற்றது. இதையொட்டி, நீல நிற பட்டுடுத்தி பூப்பல்லக்கில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
Next Story