வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடலை வியாபாரிக்கு நடந்த சம்பவம் - கேண்டின் மேலாளர் பரபரப்பு விளக்கம்
மதுரை வைகை விரைவு ரயிலில், வேர்கடலை வியாபாரம் செய்த இளைஞரை, ரயில்வே கேண்டின் ஊழியர்கள் வெளியேற்றி பொருட்களை வெளியே வீசியதாக புகார் எழுந்துள்ளது. மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற வைகை விரைவு ரயிலில், சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்தில், இளைஞர் ஒருவர் ரயிலில் ஏறி வேர்கடலை விற்பனை செய்ததாக தெரிகிறது. அப்போது, ரயில்வே கேண்டின் ஊழியர்கள், விற்பனை செய்த இளைஞரை வெளியேற்ற முயற்சித்த போது, கடலையை கீழே கொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளைஞர், தன்னை அவமானப்படுத்தி ஊழியர்கள் கடலையை கொட்டியதாக வேதனை தெரிவித்தார்.
Next Story