#Justin|| ஆவி பறக்க பாயும் வைகை.. பிரமிக்க வைக்கும் காட்சிகள்
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீர்ஆதாரமாக வைகை அணை உள்ளது-. வைகை அணையில் இருந்து கடந்த மாதம் 23ந் தேதியில் இருந்து இந்த மாதம் 8ந்தேதி வரையில் இன்று முதல் டிசம்பர் 8ந்தேதி வரையில் வைகை பூர்வீக பாசன பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களின் தண்ணீர் தேவைக்காக 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த வாரம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தால், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியாக அதிகரித்தது-. இதனையடுத்து வைகை பூர்வீக பாசன பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் கண்மாய் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி முதற்கட்டமாக சிவகங்கை மாவட்ட கண்மாய் பாசனத்திற்காக கடந்த 4 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்ட கண்மாய் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது-. ஏற்கனவே வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 600 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 3 ஆயிரம் கனஅடியும் சேர்த்து மொத்தமாக 3600 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை அணையின் முன்பாக இரண்டு கரைகளையும் இணைக்கு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் வைகை ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....