தென்தமிழகத்தில் பிரசித்தியான உவரி சுயம்புலிங்கம் கோயிலில் களேபரம்.. உச்சக்கட்ட மோதல்

x

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்கம் சுவாமி கோயிலில், அறநிலையத் துறையினருக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையேயான மோதல் முற்றியிருக்கிறது.. கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சகர்கள், தங்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பார்க்கலாம் விரிவாக...

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில்தான் இந்த களேபரம்..

கோயிலில் 2 அர்ச்சகர்கள் தவிர்த்து மற்ற அர்ச்சகர்களை நீக்கம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டிருக்கிறது..

இதை எதிர்த்து, அர்ச்சகர்கள் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றமும் அறநிலையத்துறைக்கு சாதகமாக, 2 அர்ச்சகர்களை தவிர்த்து மற்றவர்கள் கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதனால், விரக்தியடைந்த அர்ச்சகர்கள் கோயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அதில் ஒரு அர்ச்சகர் உடலில் எண்ணெய்யை ஊற்றி அசம்பாவிதத்தை ஏற்படுத்த முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

தகவலறிந்து வந்த போலீசார், நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அர்ச்சகர்களை கோயிலில் இருந்து வெளியேற்றிய நிலையில், இரு தரப்புக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பானது... தொடர்ந்து கோயிலும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் சென்றது..

இந்த களேபர சம்பவத்தில், தங்களின் இல்லங்களில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்கள், தங்களின் மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்...

பரம்பரை பரம்பரையாக சுமார் 800 ஆண்டுகளாக கோயிலில் அர்ச்சகர்களாக பணியாற்றி வந்த தங்களை எந்தவொரு முன்னறிவிப்புமின்றி அடித்து வெளியேற்றியது வேதனையளிக்கிறது என தெரிவித்திருக்கிறார்..

இதனிடையே, இவையனைத்தும் கோயில் தர்மகர்த்தாவாக இருக்கும் ஒருவரின் தனிப்பட்ட பகையில் பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கை என கூறி பகீர் கிளப்பியிருக்கிறார் உவரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர்...

மிகவும் பழமை வாய்ந்த உவரி சுயம்பு லிங்க சுவாமி கோயிலில் அர்ச்சகர்களுக்கும், அறநிலையத்துறையினருக்கும் இடையேயான இந்த மோதலும், கிட்டதட்ட 2 அர்ச்சகர்களை தவிர்த்து 50க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்ட இந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்