கொளுத்தும் கோடை வெயில்.. விலங்குகளுக்கும் `டயட் சார்ட்'

x

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ உயிரியல் பூங்காவில் கோடை வெயிலை எதிர்கொள்ள விலங்குகளுக்கு பழங்கள், காய்கறிகள் வழங்கப்படுகின்றன. வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், தொடர்ந்து தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் உயிரியல் பூங்கா குளிர்விக்கப்படுவதுடன், உணவுப் பட்டியலும் மாற்றப்பட்டுள்ளது... காலை மாலை வேளைகளில் புலி, கரடி போன்ற பெரிய விலங்குகள் குளியலாடுகின்றன. இறைச்சியின் அளவைக் குறைத்து, தண்ணீர் அதிகம் வைக்கப்படுவதுடன், பழங்கள் காய்கறிகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்