தமிழகத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமை..காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா சித்திர சீலமநாயக்கனூர்யை சேர்ந்த சின்னமுத்து
என்பவர் தனது வீடு மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் பாதையை நான்கு புறமும் வேலி அமைத்து எங்கும் செல்ல முடியாதபடி தடுத்து ஊர்மக்கள் தீண்டாமை வேலி அமைத்துள்ளதாக மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி
தீண்டாமை வேலி இருக்கிறதா என்பது குறித்து காவல்துறை உரிய முறையில் விசாரணையை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Next Story