லஞ்ச ஒழிப்புத்துறை கையில் சிக்கிய கணக்கில் வராத "பெரிய தொகை" - நெல்லையில் பரபரப்பு

x

நெல்லை ஊராட்சி முகமை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, கணக்கில் வராத சுமார் 96 ஆயிரம் ரூபாயை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நெல்லை மாவட்ட ஊராட்சி முகமையின், பொறியியல் பிரிவை சார்ந்த உதவி இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத 95 ஆயிரத்து 800 ரூபாய் பணம், இனிப்பு மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கணக்கில் வராத பணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விசாரணையில் இறங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்