சென்னை பல்கலை. சிண்டிகேட் கூட்டம் - எழும் விமர்சனங்கள்
8 மாதங்களாக நடைபெறாமல் இருக்கும் சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.பல்கலைக்கழக முக்கிய முடிவுகளை சிண்டிகேட் குழு ஒப்புதலுக்கு பிறகே நிறைவேற்றப்படுவது நடைமுறை வழக்கமாகும். அந்த வகையில் மாதம் ஒருமுறை சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கவுரி, பதவியில் இருந்த போது 3 மாதங்கள், நேரடியாக சிண்டிகேட் கூட்டத்தை நடத்தவில்லை என கூறப்படுகின்றது. தற்போது அவரது பதவிக்காலம் முடிவடைந்து, துணைவேந்தர் பதவி 5 மாதங்களாக காலியாக இருக்கும் நிலையில், சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த எட்டு மாதங்களாக சிண்டிகேட் குழு கூட்டம் நடத்தப்படாமல் இருப்பது பல்கலைக்கழக நலனை பாதிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உடனடியாக உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் உள்ள வழிகாட்டுதல் குழு, சிண்டிகேட் கூட்டத்தை உடனடியாக நடத்திட வேண்டும் என்று, பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.