ஜூலை 4ல் பொதுத்தேர்தல் - பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு
பிரிட்டனில் வருகின்ற ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
பிரிட்டனின் பிரதமராக தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். பிரிட்டனை பொறுத்துவரை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். தேர்தல் நடக்கும் நாளை அங்கு பிரதமரே தீர்மானிப்பார். அப்படி இருக்கையில், சட்டப்படி அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜூலை 4ம் தேதி அன்றே பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்தும் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பாதகமாக உள்ளன. பிரிட்டனில் 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை தொழிலாளர் கட்சி முடிவுக்கு கொண்டு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.