``சதி செய்யும் மத்திய அரசு’’ - 2ம் உலக தமிழ் மாநாட்டில் பரபரப்பு

x

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், இரண்டாம் உலக தமிழ் வளர்ச்சி மாநாடு தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, செஞ்சி மஸ்தான் மற்றும் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, மத்திய அரசு தமிழை ஒழிக்க சதி செய்வதாகவும், அதனை எதிர்த்து சட்ட போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்