``பிரதமருக்கு நன்றி..'' வக்ஃபு சட்ட திருத்தம்... திடீர் ட்விஸ்ட்... ஷியா இஸ்லாமியர்கள் ஆதரவு

x

வக்ஃபு சட்ட திருத்த மசோதாவிற்கு ஷியா இஸ்லாமியர் அமைப்பு ஆதரவை தெரிவித்துள்ளது. வக்ஃபு சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பான திருத்த மசோதா, இஸ்லாமியர் நலனை பாதுகாக்க கொண்டு வந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை டெல்லி ஷியா முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து, சட்டத்திற்கு ஆதரவை வழங்கியதோடு, மசோதாவை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடிக்கும் நன்றியும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்