கை விரலை கடித்து துப்பிய மகன்.. ரத்தம் வடிய வடிய காவல் நிலையத்திற்கு வந்த இளைஞன்.. பதறிய போலீஸ்
உளுந்தூர்பேட்டை அருகே சித்தப்பாவுடன் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இளைஞர், ரத்தம் வடிய வடிய காவல் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பு.கில்லனூர் கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டியனுக்கும் அவருடைய சித்தப்பா கோவிந்தனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வரும் நிலையில், இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டு, கோவிந்தனின் கை விரலை துரைப்பாண்டியன் கடித்துள்ளார். அப்போது, கோவிந்தன் தாக்கியதில் துரைப்பாண்டியனின் தலையில் காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்த நிலையில், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்த அவரை, போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரின் பேரில், கோவிந்தனையும், அவருடைய மனைவி பழனியம்மாளையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story