"இதுக்கு கூடவா லஞ்சம்" - வரைமுறை மீறிய தற்காலிக ஊழியர்.. அதிகாரிகள் காட்டிய அதிரடி

x

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக சரஸ்வதி பணிபுரிந்து வந்தார். இவர், இறப்பு சான்றிதழை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், தற்காலிக ஊழியர் சரஸ்வதியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கூகுள் பே, போன் பே மூலம் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர் ராஜவேலுவை முதல் குற்றவாளியாக சேர்ந்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்