கோரிக்கை வைத்த கிரிக்கெட் வீரர்.. உறுதிபட கூறிய அமைச்சர் உதயநிதி | Udhayanidhi Stalin | Thanthitv

x

சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரஸா அரசு பள்ளியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஹாக்கி மினி ஸ்டேடியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

பின்னர் கோபாலபுரம் மாநகராட்சி மைதானத்தில் 7.79 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தையும் நேரில் ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி,பார்வை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் மகாராஜா உதவிகேட்டு கோரிக்கை வைத்துள்ளதாகவும், அவருக்கு கண்டிப்பாக உதவி செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்