"பட்டா வேண்டி காத்திருப்போருக்கு விரைவில்.." - அமைச்சர் உதயநிதி தகவல் '
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, முதலமைச்சர் உத்தரவுப்படி, உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் வருவாய், வீட்டு வசதித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றதாக கூறியுள்ளார். பட்டா வேண்டி காத்திருக்கும் பொது மக்களுக்கு விரைவில் பட்டா வழங்குவதற்கான தொடக்கப்புள்ளியாக இக்கூட்டம் அமைந்துள்ளதில் மகிழ்ச்சி என்றும், அமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.
Next Story