சனாதனம் குறித்த பேச்சு.. அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு கோர்ட் போட்ட உத்தரவு

x

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய தமிழ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியிருந்தார். இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, பெங்களூரில் உள்ள எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் பரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.பிரீத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த‌து. அப்போது, புகார் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்த நீதிபதி, விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்