உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? - இன்று எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்
தமிழக அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற உள்ளது.
கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 27ம் தேதி அமெரிக்க செல்ல உள்ளார். இதையொட்டி, கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இந்த அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Next Story