ஒரேயொரு கூட்டம்.. ஆடிப்போன மதுரை - அதிகாரியை தூக்கி எறிந்த அமைச்சர் உதயநிதி

x

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவை திடீர் பணியிடமாற்றம் செய்து பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கார்த்திகா, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலராக இருந்த முருகன் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் போது, பள்ளிக்கல்வித்துறையில் மதுரை பின்தங்கியிருப்பதாக அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில், கல்வி அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். மேலும், புத்தக திருவிழாவின் போது, மாணவர்கள் ஆடி மயங்கியது, பட்டூர் அரசு பள்ளி மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்த வீடியோ, புத்தக திருவிழாவில், ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் காலணி இல்லாமல் காத்திருந்தது உள்ளிட்ட தொடர் சர்ச்சைகளால் மதுரை மாவட்ட கல்வி அதிகாரி மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்