"உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி" - தயாநிதி மாறன் பரபரப்பு பேச்சு
தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளதால், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிக்க பார்ப்பதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
Next Story