இடிந்து விழுந்த கழிப்பிட கட்டிடம்-சிக்கி கொண்ட 8 பெண்கள் உள்பட 10 பேர் -உதகையை உலுக்கிய கோர சம்பவம்

x

லவ்டேல் பகுதியில் உள்ள காந்தி நகரில், மேத்யூ என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். கட்டுமானப் பணி நடக்கும் இடத்திற்கு அருகே, ஏற்கனவே இடியும் தருவாயில் இருந்த நகராட்சி கழிப்பிட கட்டிடம் இருந்துள்ளது. புதிய வீடு கட்டி வரும் மேத்யூ, அந்த கழிப்பிட கட்டிடத்தின் அடியில் இருந்த மண்ணை சுமார் 50 அடிக்கு வெட்டி எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள், தேநீர் குடிப்பதற்காக கழிப்பிட கட்டிடத்தின் அடியில் அமர்ந்துள்ளனர். அப்போது, திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில், 8 பெண்கள் உள்பட 10 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர், ஜேசிபி இயந்திர உதவியுடன், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்