ஆசை காட்டிய இரு பெண்கள்..! வலையில் சிக்கய பிரபல நடிகர்..! அதிரடி கட்டிய போலீஸ்

x

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் நிறுவன பெண் இயக்குனர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என நடிகர் டேனியல் அருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் டேனியல் அருண்குமார், தனியார் நிறுவனம் மூலம் குத்தகைக்கு வீடு தேடியுள்ளார். போரூரில் வாடகைக்கு மட்டுமே வீடு கிடைத்த நிலையில், 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தந்தால் அதற்கான வட்டித்தொகையை வாடகையாக தருவதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஏற்ற டேனியல் அருண்குமார், பணம் கொடுத்து ஒப்பந்தமும் செய்தார். ஆனால், முறையாக அந்த நிறுவனம் வட்டியை வழங்கவில்லை என கூறப்படுகிறது. வட்டியை கேட்டபோது, தனியார் நிறுவன இயக்குநர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில், நிறுவன இயக்குனர்கள் காவ்யா, திவ்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் ஜாமின் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணையில், ஜாமின் வழங்கினால், இருவரும் வெளிநாடு தப்பிச் செல்வார்கள் என டேனியல் அருண்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்