ஊட்டியில் யாரும் அறியாது சத்தமின்றி `சத்தமாக' நடக்கும் பகீர் சம்பவங்கள்..Ex IAS அதிகாரி உடைத்த தகவல்

x

உதகையில் அனுமதி இன்றி வெடி மருந்துகள் மற்றும் ராட்சத இயந்திரங்களை கொண்டு பாறைகள் உடைப்பதை கண்டித்து,முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்டார்.உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் கோடப்பமந்து பகுதியில், தடைகளை மீறி பாறை உடைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் சமூக ஆர்வலருமான சுர்ஜித் கே சவுதிரி என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி மூலம் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து நடவடிக்கை எடுக்காததால், அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்