களத்தில் இறங்கிய தமிழக வெற்றிக் கழகம்... கண்டன ஆர்ப்பாட்டம்

x

10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி, தூத்துக்குடியில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போதை விழிப்புணர்வு குறித்தான பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்