சிக்கிய 30 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள்.. தூத்துக்குடியில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

x

முறப்பநாட்டை சேர்ந்த துரைப்பாண்டி என்பவரது வீட்டை சோதனை செய்ததில் அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ சாரஸ் என்ற போதைப்பொருள் மற்றும் 5 கிலோ கேட்டமைன் என்ற போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.. இதையடுத்து துரைப்பாண்டியை கைது செய்த கடலோர காவல் நிலைய போலீசார் அவரிடம் இருந்த போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதை அடுத்து, கைது செய்யப்பட்ட துரைப்பாண்டி மற்றும் போதை பொருட்களை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்