TTF வரிசையில் VJ சித்து.. -போலீசில் புகார்-சிக்குவாரா சித்து?

x

அண்மையில், யூடியூபர் டிடிஃப் வாசன், செல்போன் பேசிய படியே கார் ஓட்டியதற்காக காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரபல யூடியூபரான வி.ஜே. சித்து மீதும் இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து புகாரளித்த வழக்கறிஞர் கூறுகையில், தொடர்ச்சியாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யூடியூபில் வீடியோ பார்க்கும் நிலையில், விஜே சித்து விலாக்ஸ் செல்போன் பேசிக் கொண்டே கார் ஓட்டும் வீடியோ வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரின் அனைத்து வீடியோக்களிலும் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்