சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டிடிஎஃப் வாசன் பேசி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்

x

5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு... ஐந்தும் சாதாரண வழக்கு அல்ல... கொலையாகாத மரணம், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிப்பது என... சின்ன சின்ன சர்ச்சையில் சிக்கி கொண்டிருந்த டிடிஎஃப் வாசன் தற்போது பெரும் விபரீதத்தில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.....

மகாராஷ்டிரா நோக்கி ரைடு செல்ல திட்டமிட்ட டிடிஎஃப் வாசன்... அதற்காக தன் நண்பருடன் சென்னையில் இருந்து தயாரான நிலையில், கிளம்பும் போது உணவேதும் உட்கொள்ள வில்லை எனவும்... வெறும் டீ மட்டுமே குடித்திருந்ததால் ரைடின் போதே தலை சுற்றல் ஏற்பட்டு தடுமாறியதாகவும் கூறியிருக்கிறார்....தனக்கு ஏற்பட்ட இந்த அசாதாரண நிலையை, பின்னால் வந்த தனது நண்பரான அஜீஸிடம் இன்டர் காம் மூலம் வாசன் தெரிவித்ததாகவும், தொடர்ந்து மெதுவாக சென்று கொண்டிருந்த போது திடீரென நொடியில் விபத்து அரங்கேறியதாகவும் தெரிவித்திருக்கிறார்...தான் சாலை விதிகளை அத்துமீறியதாகவும், வேண்டுமென்றே வீலிங் செய்து விபத்தை அரங்கேற்றியதாகவும் சிலர் கூறுகின்றனர் என தெரிவித்த வாசன், அதற்கு மறுப்பு தெரிவித்து... தான் ஓட்டிச்சென்ற பைக் 1300 cc என்றும், சிறு கவனக்குறைவு ஏற்பட்டதாலயே விபத்து அரங்கேறியதாகவும் தெரிவித்திருக்கிறார்...தொடர்ந்து பேசிய வாசன், இந்த கோர விபத்திலும் நான் உயிர் தப்பியதற்கு, நான் அணிந்திருந்த பாதுகாப்பு உபகரணங்களே காரணம் என தெரிவித்திருக்கிறார்....

விபத்தில், நான் தூக்கி வீசப்பட்ட பொழுது... தனது முதுக்குபகுதி தான் பயங்கரமாக அடிவாங்கியதெனவும்... நான் முன்கூட்டியே சேப்டி ஸ்பைனல் கார்டினை முதுகில் அணிந்திருந்ததால், உயிர் தப்பினேன் எனவும் கூறியிருக்கிறார்....அவ்வளவுதான்... சிறை செல்லும் நேரம் நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்த டிடிஎஃப் வாசன், சினிமா பாணியில் தனது ரசிகர்களுக்கு மோட்டிவேசனல் கொயட்ஸ்களை அள்ளிவிட, கூடவே சிறை செல்லவும் தயரானார்..

ஆக மொத்தம், தனது ரசிகர்களுக்கு டிடிஎஃப் வாசன் சொல்ல விரும்புவது... தன்னை பின் தொடரும் ரசிகர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பைக்கை தொடக்கூடாதென்றும்.... லட்சத்தில் ஹெல்மட்டும், பாதுகாப்பு உபகரணங்களும் அணிந்து செல்லும் தனக்கே இந்த நிலைமை என்றால்... 600 ரூபாய் ஹெல்மெட்டுடன் பயணிக்கும் நீங்கள்.... என நம்மை யோசிக்க வைத்திருக்கிறார்....


Next Story

மேலும் செய்திகள்