துப்பாக்கிச்சூடு பதற்றம் தணிவதற்குள்.. ``தன்னை போன்ற குளோனை இறக்கிய டிரம்ப்'' - பைடன் அட்டாக்

x

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சியின் ஜே.டி. வென்ஸ்ஸை டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளராக, தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடும் நிலையில், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப், துணை அதிபர் வேட்பாளராக ஓஹியோ மாகாண செனட்டர் ஜே.டி.வான்ஸ்ஸை அறிவித்துள்ளார். இந்நிலையில், டிரம்பின் குளோன்தான் ஜே.டி.வான்ஸ் என்றும், இருவருக்கும் இடையே வேறுபாடு கிடையாது என்றும் அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா சிலிகுரி, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்