காலதாமதமாக தவணை கட்டிய தொழிலாளி..கொடூரமாக அடித்த தனியார் ஊழியர்கள்...திருப்பூரில் அதிர்ச்சி

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடனுக்கான தவணை தொகையை, தாமதமாக செலுத்திய விசைத்தறி கூலித்தொழிலாளி மீது, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

செம்மிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜீவ் காந்தி, வீட்டை அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை கடந்த 5 வருடங்களாக கட்டி வரும் நிலையில், இந்த மாதத்திற்கான தவணையை தாமதமாக செலுத்தியுள்ளார். தாமதமாக பணத்தை செலுத்திய போது, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அவதூறாக பேசியுள்ளனர். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டதில் ராஜிவ்காந்தியை அவர்கள் அடித்து கீழே தள்ளியுள்ளனர். இதில் ராஜிவ் காந்திக்கு தலையில் காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்