பயங்கர ஆயுதங்களுடன் திருச்சியை சுற்றி சுற்றி வந்து பதறவிட்ட கும்பல்..பின்னணியில் அதிமுக புள்ளி..
பயங்கர ஆயுதங்களுடன் திருச்சியை சுற்றி சுற்றி வந்து பதறவிட்ட கும்பல்..பின்னணியில் அதிமுக புள்ளி.. 8 பேர் - பெரும் அசம்பாவிதத்தை தடுத்த போலீஸ்
திருச்சி மாநகரில் கடன் வசூலிக்க வீச்சரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய அதிமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த கணேசன் என்பவரிடம், கருமண்டபத்தை சேர்ந்த வெங்கேடசன் 30 லட்சம் தராததால் இழுத்தடித்துள்ளார். இதனை வசூலிக்க கணேசனின் உறவினர் முத்தையா சென்றபோது, பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், வெங்கடேசனை தாக்குவதற்காக, முத்தையா, அதிமுக இளைஞர் பாசறை திருச்சி மாவட்ட தலைவர் கரண் உட்பட 8 பேர், 3 கார்களில் அரிவாள்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் சென்றது தெரிய வந்துள்ளது. பிடிபட்ட 8 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story