2003ல் இரட்டை கொலை செய்து 15 வருசம் சிறைவாசத்திலிருந்த நபர்..மீண்டும் வெறிவந்து இரட்டை கொலை..

x

2003ல் இரட்டை கொலை செய்து 15 வருசம் சிறைவாசத்திலிருந்த நபர்..மீண்டும் வெறிவந்து இரட்டை கொலை..வரும் வழியில் இன்னொரு கொலை - திருச்சியை கதறவிட்ட தாத்தா

திருச்சியில் அரங்கேற்றப்பட்டிருக்கும் இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள வாளவந்தி கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். 64 வயது முதியவரான இவர், முசிறி அந்தப்பட்டியில் வசித்து வந்த திருமணமான பெண் கீதா என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், தீபா தன் கணவரை பிரிந்து தனியே வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திடீரென பாலச்சந்திரனுடனான உறவை தீபா முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த பாலச்சந்திரன் தீபாவை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து வரும் வழியில் ஜெம்புநாதபுரம் பகுதியில் உள்ள டீ கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த திமுக நிர்வாகி ரமேஷ் என்பவரையும் பாலச்சந்திரன் அரிவாளால் வெட்டிக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலசந்திரனின் நிலத்தை ரமேஷ் ஆக்கிரமிப்பு செய்திருந்ததாகவும், ஆக்கிரமிப்பை அகற்றுமாறு பல முறை வலியுறுத்தியும் கேட்காததாலையே இந்த கொலை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, ஜெம்புநாதபுரம் காவல்நிலையத்திலே பாலசந்திரன் சரணடைந்த நிலையில், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தற்போது சரணடைந்திருக்கும் பாலச்சந்திரன், கடந்த 2003 ஆம் ஆண்டில் இதேபோல் இரட்டை கொலைகள் செய்து 15 வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து வெளியில் வந்ததாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்