காவிரியை வேடிக்கை பார்த்தவர் அடித்து கொலை... சிக்கிய சிறுவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த திருச்சி

x

திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த அன்பு நகரை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன். திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த இவர், ஸ்ரீரங்கம் கீதாபுரம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நேற்று வந்துள்ளார். அந்த வீட்டின் அருகே உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் மது அருந்து கொண்டிருந்த சிலர், 'வெளியூர் காரணுக்கு இங்கு என்ன வேலை?' என கூறி ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த ரஞ்சித் கண்ணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தநிலையில்,

அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் கண்ணன் உயிரிழந்தார்.

இது குறித்து அம்மா மண்டபம் ரோடு புதுத் தெருவைச் சேர்ந்த நவீன் குமார், விஜய், சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் மற்றும் கீதாபுரத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்