NIT மாணவிக்கு போலீஸ் ஸ்டேஷனில் அவமதிப்பா? - SP வருண் விளக்கம்

x

புகாரளிக்க சென்ற என்.ஐ.டி. மாணவியை காவல் நிலையத்தில் இழிவாக பேசியதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என, திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.திருச்சி என்.ஐ.டி. பெண்கள் விடுதி அறையில், இணையதள பழுது பார்க்க சென்ற நபர் பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். பின்பு கல்லூரிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவிகள், பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றபோது, இழிவாக பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் காவலர்கள் மாணவியிடம் கண்ணியமாக நடந்து கொண்டதாகவும், புகாரை பெற்று குற்றவாளியை கைது செய்து, மாணவிக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கியதாக பெற்றோர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்