இதுவரை யாரும் பார்த்திராத மரணம் - 1 மணி நேரமாக துடித்து கடைசியில் நின்ற இதயத்துடிப்பு

x

காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லியைச் சேர்ந்த அவரது மனைவி ராஜஸ்ரீ மற்றும் மகளுடன் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அன்புமேடு அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத் தடுப்பின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது... காரில் இருந்த தாயும் மகளும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கி இருந்த சசிதரனை மீட்க மிகவும் கடினமாக இருந்தது. ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரச கால மருத்துவ நிபுணர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சசிதரனுக்கு குளுகோஸ் போட்டு அவசர சிகிச்சையை தொடர்ந்தார். இருப்பினும் சசிதரனை மீட்க முடியாத நிலையில் கார் பள்ளத்தில் இருந்து கிரேன் உதவியுடன் மேலே கொண்டுவரப்பட்டு உடைத்து காருக்குள் இருந்து சசிதரன் ஒருமணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சையில் இருந்த அவரது மனைவியும் ராஜஸ்ரீயும் பரிதாபமாக உயிரிழந்தார்... சம்பவம் குறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தும் நீண்ட நேரத்திற்கு பின்னரே தீயணைப்பு துறையினர் வந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் தீயணைப்பு துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து வைத்து தீயணைப்பு துறையினரை அனுப்பி வைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்