டிக்கெட் புக் செய்தவருக்கு மெசேஜில் வந்த அதிர்ச்சி.. கேட்டதற்கு ஒரே வார்த்தையில் சொன்ன ரயில்வே

x

திருவெறும்பூரில் ஓடாத ரயிலுக்கு முன்பதிவு செய்து மோசடி நடப்பதாக மூதாட்டி ஒருவர் புகார் அளித்த நிலையில், அந்த ரயில் கேன்சல் செய்யப்படவில்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த மூதாட்டி உமா ராமசாமி, திருச்சியில் இருந்து பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் செல்வதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். முன்பதிவு டிக்கெட் உறுதியான சிறிது நேரத்திற்கெல்லாம் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதாகவும், பிடித்தம் போக மீதி பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் குறுந்தகவல் வந்ததாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் உமா ராமசாமி பேசிய போது, புக்கிங் செய்த தேதியில் அந்த ரயில் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்துள்ள உமா ராமசாமி, ஓடாத ரயிலுக்கு முன்பதிவு செய்து ஆன்லைன் மோசடி நடப்பதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்