திருச்சி ஏர்போர்ட்டில் பயணிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Trichy
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் இன்று காலை 6 மணி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 2-ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில், அந்த புதிய முனையத்தில் இருந்து இன்று காலை 6 மணி முதல் அனைத்து விமானங்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்து நடைபெறும். பயணிகள் புதிய முனையத்தில் ஏற்றி இறக்கப்படுவார்கள் என்று திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி கூறியுள்ளார். ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 480 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story