4500 அடி உயரத்தில் 141 உயிர்கள்..இரவு 8.10க்கு தலைகீழாக மாறிய காட்சிகள்..என்ன நடந்தது..? | Trichy
திருச்சியிலிருந்து ஏர் இந்தியா விமானம் 5:40 மணிக்கு ஷார்ஜா புறப்பட்டு சென்றது. விமானம் வானில் பறக்க தொடங்கியதும் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் 4 ஆயிரம் அடி உயரத்தில் பயணம் செய்தது. 6:05 மணிக்கு விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. விமானம் வானிலேயே வட்டமடிக்க தொடங்கியது. விமானத்தை 8.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது.
விமானம் சரியாக 8.10 மணிக்கு மீண்டும் திருச்சி விமான நிலையத்தை நெருங்கியது. விமானம் பறக்கும் உயரத்தின் அளவு மெல்ல மெல்ல குறைக்கப்பட்டது. விமானம் சரியாக 8.15 மணிக்கு திட்டமிட்டபடி ஓடுபாதையை தொட்டது. விமான சக்கரங்கள் ஓடுபாதையில் ஓடிய வண்னம் பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியது.
திருச்சி விமான நிலையத்தில் பதற்றம் தணிந்தது. வழக்கமாக 5:40 மணிக்கு புறப்படும் விமானம் ஷார்ஜாவுக்கு இரவு 8:20 மணிக்கு சென்றடையும். நேற்று அதே நேரத்தில் திருச்சியிலேயே வட்டமடித்து அங்கேயே தரையிறங்கியது.