தமிழத்துக்கு பல்ஸை எகிறவைத்த அந்த 2மணிநேரம்..வானில் அல்லாடிய 141 உயிர்கள்..அடுத்து நடந்த பேரதிசயம்

x

திருச்சி மாவட்டத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மாலை 5.44 மணி அளவில், 141 பயணிகளுடன் ஷார்ஜாவிற்கு கிளம்பியது. பின்னர் திடீரென ஏற்பட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. தரையிறக்குவதற்கு முன் விமானத்தில் உள்ள எரி பொருளை தீர்க்க வேண்டும் என்பதற்காக, 2 மணி நேரத்திற்கு மேலாக திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வானத்தில் பறந்து பின்னர் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த செய்தி கேட்டதும் பயணிகளின் உறவினர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். பின்னர் விமானம் தரையிறக்கப்பட்ட செய்தி கேட்டதும் ஆறுதல் அடைந்தனர். ஷார்ஜா செல்லக்கூடிய விமான பயணிகளுக்காக, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு பயணிகள் இல்லாத விமானம் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதனையடுத்து, அதிகாலை 1.59 மணி அளவில் சிறப்பு விமானம் ஷார்ஜா நோக்கி கிளம்பியது. இதில் 35 பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு மீண்டும் சொந்த ஊர் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்