கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் கிடந்த சடலம்.. மகனின் சாவுக்கு பின்னால் தாய், தம்பி - அதிர்ச்சி தகவல்

x

திருச்சி, பீமநகர் பஞ்சுமில் கிடங்கு பகுதியை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவர்.. கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில், மின்சாரா வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விசாரணையில், தமிமுன் அன்சாரிக்கு திருமணமானதும், திருமணமான சில ஆண்டுகளிலே தமிமுன் அன்சாரியை அவரது மனைவி பிரிந்து சென்றதும் தெரியவந்துள்ளது. மனைவியின் பிரிவால் மன உளைச்சலில் இருந்த தமிமுன் அன்சாரி, தினமும் மதுஅருந்தி விட்டு தனது தாய் மற்றும் தம்பியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த இருவரும், தமிமுன் அன்சாரியை மின்சார வயறால் கழுத்தை இறுக்கி கொலை செய்தையும், பின் சடலத்தை ஆட்டோவில் ஏற்றி வந்து கொள்ளிடம் ஆற்றில் வீசியதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில், தமிமுன் அன்சாரியின் தாய் மற்றும் தம்பியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்