ரயில்வே மேம்பாலத்தில் மீண்டும் விரிசல்..! | Trichy
திருச்சி, பொன்மலை அருகே ரயில்வே மேம்பால சுவற்றில் மீண்டும் விரிசல் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கனவே, கடந்த ஜனவரி 12-ஆம் தேதி மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, சீரமைப்பு பணிக்கு பின்னர் போக்குவரத்து இயக்கப்பட்டது. இந்நிலையில், சீரமைக்கப்பட்ட சுவற்றின் மற்றொரு பகுதியில் விரிசல் விழுந்ததால், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story