3 எழுத்து அசிங்கத்தால் சிக்கிய டாக்டர், ஸ்கூல் HM.. காரிலேயே வைத்து சுற்றிய போலீசால் பரபரப்பு

x

திருச்சியில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசு மருத்துவர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரை, சிறையில் அடைக்காமல் காரிலேயே வைத்து போலீசார் சுற்றி வந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகரபகுதியில் தனியார் தொடக்கப்பள்ளியில், சில மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இங்கு, கிரேஸ் சகாயராணி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளதால், அரசு மருத்துவரான அவரது மகன் சாம்சன் அடிக்கடி விடுதிக்கு சென்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த‌தாக புகார் எழுந்த‌து. இதையடுத்து சாம்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்தபோது, படம் பிடிக்க செய்தியாளர்களிடம் காவல் அதிகாரி வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார். பின்னர், நீதிபதி விடுமுறையில் இருந்த‌தால், சாம்சன் மற்றும் கிரேஸ் சகாயராணியை, திருச்சி மாநகரம் முழுவதும் 20 கிலோ மீட்டருக்கு, காரிலேயே வைத்து சுற்றி வலம் வந்தனர். போக்சோ வழக்கில் கைதான அரசு மருத்துவரை சிறையில் அடைக்காமல் காரில் வைத்து சுற்றியதால், அவரை காப்பாறும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபடுகின்றனரா? என்ற சந்தேகத்தை அனைவர் மத்தியில் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்