கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. மக்களை எச்சரித்த அதிகாரி

x

கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மின் கோபுரத்தின் தூண்கள் அரித்து செல்லப்பட்டன. இதனால் எந்நேரத்திலும் சாயும் அபாயத்தில் இருப்பதால் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. திருவானைக்காவல் பகுதிக்கு மாற்றுவழியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். காவிரி கரையோரம், தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், நாளை மறுதினம் ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் பக்தர்கள் புனிதநீராட முடியாது என்றும் அனைத்து படித்துறைகளிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வருவாய் அலுவலர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்