அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்.. யானை வாகனத்திலும் உலா வந்த பானபுரீஸ்வரர் - களைகட்டிய தேரோட்டம்

x

திருச்சி மாவட்டம், முசிறியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீரை பெற்று அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு சென்றனர்.

தென்காசி கடையநல்லூரில் முப்பிடாதி அம்மன் கோவில் வைகாசி பிரம்மோற்சவ 7ம் நாள் திருவிழா பலத்த அபோலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது...

செங்கல்பட்டு மாவட்டம் புகழ்பெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை ஒட்டி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது... வழியெங்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தி முழக்கங்கள் எழுப்பினர்.

பிரசித்தி பெற்ற கும்பகோணம் பானபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 6ம் நாளை ஒட்டி நள்ளிரவு, மின் ஒளியில் பானபுரீஸ்வரர் யானை வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்... இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்