திருச்சியை அதிர வைத்த கடத்தல்.. சித்து வேலை காட்டிய போலீஸ்.. சாட்டையை சுழற்றிய வருண் IPS
கரூரில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்த நிலையில், திருச்சி முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றுப்பாலத்தில், தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரில் கடத்தி வரப்பட்ட152 கிலோ எடையுடைய குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து 96 ஆயிரத்து 420 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் தனிப்படையினர் கைப்பற்றிய குட்காவின் மதிப்பிற்கும், காவல் ஆய்வாளர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்தபோது காட்டப்பட்ட மதிப்புக்கும் வித்தியாசம் இருந்துள்ளது. விசாரணையில் தவறு இருந்தது கண்டறியப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் குணசேகரன், தலைமை காவலர் சரவணன், காவலர்கள் சத்தியமூர்த்தி, அருள்முருகன், ரகுபதி ஆகிய 5 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவிட்டுள்ளார்...