பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி திரும்பி பார்க்க வைத்த திருச்சி விவசாயி
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள எரகுடி கிராமத்தில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி தினம் தினம் பூஜை செய்து வருகிறார் விவசாயி ஒருவர்... பல ஆண்டுகளுக்கு முன்பாக துபாயில் வேலை பார்த்து வந்த சங்கர் ஊர் திரும்பி முழு நேர விவசாயியாக மாறிய நிலையில், தனது நிலத்தில் மோடிக்கு கோயில் கட்டி தினமும் பூஜை செய்து வழிபாடு செய்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முதலாக பிரதமர் மோடிக்கு உருவச் சிலை அமைத்து கோவில் கட்டியது தான் தான் என பெருமிதம் தெரிவித்தார் சங்கர்... 3வது முறையாக மோடி பிரதமரான நிலையில்,வேண்டுதலின் படி தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடனைச் செலுத்த உள்ளதாகத் தெரிவித்த சங்கர், ஆயிரம் பேருக்கு கிடா வெட்டி அன்னதானம் வழங்க, தன் விளைந்த நெல்லில் 10 மூட்டைகளை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்...
Next Story